Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் பெயர் மாற்றம்: புதிய வாசகமும் அறிமுகம்

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் பெயர் மாற்றம்: புதிய வாசகமும் அறிமுகம்
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் பெயர் மாற்றம்

ஐசிஐசிஐ என்ற பெயர் பல கோடி இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தனியார் துறையைச் சேர்ந்த ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், தனது பெயரை ஐசிஐசிஐ லைஃப் இன்சூரன்ஸ் என மாற்றம் செய்துள்ளதுடன், ’ஒவ்வொரு நாளையும் எளிதாக்குவோம்’ என்ற புதிய வாசகத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

பொதுவாக, ஆயுள் காப்பீடு என்பது எதிர்பாராத அபாயங்களிலிருந்து குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான நிதி ஏற்பாடாகவே பார்க்கப்படுகிறது. இதனை மாற்றி, வாடிக்கையாளர்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை எளிதாகப் புரிந்துகொண்டு தேர்வு செய்வதுடன், தங்களின் நிதி எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு உதவும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிஐசிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல், டிஜிட்டல் மற்றும் வங்கி காப்பீட்டு பிரிவு தலைவர் ஸ்ரீனிவாஸ் பாலசுப்பிரமணியன் கூறும்போது “ஐசிஐசிஐ என்ற பெயர் பல கோடி இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக, 20 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க உதவியுள்ளோம்.மாறிவரும் வேலைவாய்ப்புச் சூழல், குடும்ப அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள், அதிகரித்து வரும் ஆயுட்காலம் மற்றும் மாறும் நிதித் தேவைகள் ஆகியவை நீண்டகால நிதித் திட்டமிடலைச் சவாலானதாக மாற்றியுள்ளன.

இத்தகைய சூழலில், ஆயுள் காப்பீடு பெறும் நடைமுறையை எளிமையாகவும், வெளிப்படையாகவும், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்வானதாகவும் மாற்றுவது அவசியம். மேலும், 2047-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற தேசிய இலக்கை எட்டுவதற்குத் தொடர்ந்து பங்களிக்க உள்ளோம்" என்றார்.

முந்தைய செய்தி
ஸ்டெர்லைட் டெக் பங்கு மேலும் உயர வாய்ப்பு - ரூ.1 கோடி லாபம்
அடுத்த செய்தி
பசுமை எரிசக்தி வழித்தட திட்டம்: 3 நிறுவனங்களுக்கு ரூ.23,500 கோடி ஒப்பந்த வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்